அம்பகமுவ பிரதேச சபைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் கினிகத்தேன பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பேருந்து ஊழியர்களும் இன்று அதிகாலை முதல் பணிப்புறக்கணிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து நிலையத்திற்குள் முச்சக்கர வண்டி தரிப்பிடம் அமைத்தல், பயணிக்கும் பேருந்து தவிர்த்து அடுத்து பயணிக்கவுள்ள பேருந்துகளுக்கு தரிப்பிட வசதி வழங்கப்படாமை உள்ளிட்ட முக்கிய பல கோரிக்கைகளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.என்பதும், மேலும் குறிப்பிடத்தக்கது .






