தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான சின்னத்தம்பி தியாகராஜா (Chinnathambi Thiyagaraja) காலமானார்.
யாழில் ராஜா சினிமா, வவுனியாவில் வசந்தி சினிமா, அமுதா சினிமா மற்றும் சரஸ்வதி சினிமா. திருகோணமலை, சுகந்தி சினிமா. மட்டக்களப்பில் சாந்தி சினிமா என வடக்கு – கிழக்கின் முன்னணி திரையரங்குகளின் உரிமையாளர் ஆவார்.
மேலும், இவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் பிரபல நடிகருமான, புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (MGR) தீவிர ரசிகர் என்பதுடன், தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், கட்சியின் முன்னாள் பொருளாலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






