திக்வெல்ல – போரகந்த பகுதியில் கூரிய அயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






