வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்ததனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றுகாலை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் அணிவகுப்பில்கலந்துகொள்ள வந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீரென மய க்கமடைந்து விழுந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அவர்களுக்கு முதலுதவிசிகைச்சைகள் வழங்கப்பட்டதன்பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது .
இந்நிலையில் அதிகநேரம் வெயிலில் நின்றுக்கொண்டு இருந்தமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.






