இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 174 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை 3,155 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






