இலங்கையில் புதிதாக 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் 14பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து, நேற்று வீடுகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 181 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 12பேர் உயிரிழந்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.






