கொழும்பின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) இரவு, நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தகவல் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய கொழும்பு 9, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.






