கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாத்திரம் 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 18 பேருக்கும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இந்தோனேசியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் குவைத்திலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து நேற்று, 24பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 789பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தொற்று உறுதியான 141 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






