இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. வன்முறையின் போது பாதிக்கப்பட்ட 47 வயதுடைய நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
வன்முறை காரணமாக தலை மற்றும் மார்பில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கொழும்பு பெரஹெர மாவத்தைக்கும் பெய்ரா ஏரிக்கும் இடையிலான நடைபாதையில் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சடனான சந்திப்பைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு அருகில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து வன்முறை ஏற்பட்டது.
இதனையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு வன்முறை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு






