கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 388 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட சந்தேகநபர்களிடமிருந்து 58 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி முதல் நேற்று (திங்கட்கழமை) வரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்கள், அங்கு வருபவர்களுக்கு கைகளை சுத்தம் செய்துக் கொள்வதற்கான வசதிகளை செய்துக்கொடுக்க வேண்டும்.
அத்துடன், அவர்களின் உடல் வெப்பத்தை அளவிடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்கள் யாராக இருந்தாலும் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






