இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 25 – 30 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
விலைசூத்திரத்திற்கு அமைவாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டீசல் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டமையானது பேருந்து கட்டணங்களின் மீது நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கெமுனு விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.






