வவுனியாவில் கோவிட் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் மழையுடனான காலநிலை அதிகரித்துள்ளதுடன்,இம்மாதம் வவுனியாவில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியிருந்ததுடன், பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக கோவிட் தொற்று தீவிர நிலையை அடையாது தடுக்கும் வகையில் பைசர் கோவிட் தடுப்பூசிகள் மீள ஏற்றப்படவுள்ளன.
தடுப்பூசி செலுத்தப்படும் நேரங்கள்
இதுவரை தடுப்பூசிகளை முறையாக செலுத்தாதவர்கள் (1,2,3,4) தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் நிலையத்தில் காலை 9 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை தடுப்பூசிகளைப் பெற முடியும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரியுள்ளனர்.






