ஹட்டன் நகரம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்படி, மீள் அறிவித்தல் வரும் வரையில் இது நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






