கொட்டகல – பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டகொடை தோட்டம் – யொக்ஸ்போர்ட் பிரிவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
பேலியகொட மீன் சந்தை தொடர்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய 38 வயதுடைய ஒருவருக்கு இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகல பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.






