பாணந்துறை கடற்கரையில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பாடசாலை சீருடையில் மாணவர்கள் ஐவர் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
இவ்வாறு பிடிப்பட்ட மாணவர்கள் 15 தொடக்கம் 16 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் ஐந்து பேரும் சீருடையில் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது இவ்வாறு பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.






