பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், 60 வயது மதிக்கத்தக்கவர் எனவும் 5 அடி உயரமுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த டசலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.






