கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், பண்டாரவளையில் கொரோனா சிகிச்சை நிலையமொன்றினை அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பதுளைக் கிளைத் தலைவர் பாலித்த ராஜபக்ச இதனை குறிப்பாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பண்டாரவளை அரசினர் மருத்துவமனை வளாகத்தில், மேற்படி கொரோனா நிலையப் பிரிவு இடம்பெறும்.
இப் பிரிவில் நூறு நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வகையில் நூறு கட்டில்கள் போடப்பட்டுள்ளன.
100 நோயாளர்கள் ஒரு தடவையில் சிகிச்சைப் பெறும் வகையில் அனைத்துவசதிகளும், இங்குமேற்கொள்ளப்பட்டுள்ளன” எனத் தகவல் தெரிவித்துள்ளார்.






