கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவருக்கு, முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்புகளை பேணிய, ஏனைய 20 அதிகாரிகளுக்கு பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பி.சி.ஆர்.சோதனை முடிவுகளில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






