கொரோனா தொற்றிலிருந்து விடுபடும் நோக்கில் இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒரு கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பிரதமரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் விடுவித்துக் கொள்ளும் நோக்கில் இந்து ஆலயங்களில் இந்த விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் இந்த விசேட வழிபாடு மேற்கொள்ளப்பட உள்ளது. மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் இவ்விசேட பிரார்த்தனை வழிபாடுகளைத் தினமும் காலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் இடம்பெறும் ‘ஆலய தரிசனம்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது.






