வத்தளை- கெரவலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் மேலும் 68 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொபடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த தொழிற்சாலையில் இதற்கு முன்னர் 49 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 68 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 3000 பேர் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
அந்தவகையில் குறித்த தொழிற்சாலையில், 117 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.






