குருநாகல் – தும்மலசூரிய பகுதியில் காதல் விவகாரத்தால் இளைஞர் ஒருவர் தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காதலியை கொலை செய்த நபர் விசம் அருந்தியுள்ள நிலையில் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த யுவதி 22 வயதுடைய மாதம்பே, தும்மலசூரிய பகுதியில் வசித்து வந்துள்ளதோடு இவர் தொழிற்சாலையொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதியும் கொலை செய்த சந்தேக நபரும் காதலர்கள் என்றும், காதலுக்கு யுவதியின் பெற்றோர் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
யுவதி அவரது மாமாவுடன் உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காயமடைந்த குறித்த யுவதி சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.






