ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டும் என கட்சிப் பிரதிநிதிகள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கடந்த வாரம் இந்த முன்மொழிவை முன்வைத்தார் என்றும் இதனை தான் ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில் நாடாளுமன்றத்தில் இருப்பது மிக முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டி கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒரு கோரிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட்டு அதை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தனர் என்றும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.
இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இதில் உடன்பாடு இல்லை என்றபோதும் கட்சி பிரதிநிதிகளின் கோரிக்கை அமைய இறுதி முடிவு அடுத்த வாரமளவில் எட்டப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் மூலம் ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புவதாக அக்கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






