வெளிநாட்டு வேலைக்காக சென்று மீண்டும் இலங்கைக்கு வர முடியாமல் இருந்த 197 இலங்கையர்கள் நேற்று (11) அதிகாலை இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்படி டுபாயிலிருந்து 107 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 78 பேரும், ஜப்பானிலிருந்து 12 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக ஊழியர்கள் மூலம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அழைத்துச். செல்லப்பட்டனர்.






