அலுவலகங்களில் ஒரு குழுவாக ஒன்றாக சாப்பிடுவதும், புகைப்பதும் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
பெரும்பாலான மக்கள் அலுவலகம் அல்லது பணியிடத்திற்கு செல்லும் வழியில் முகக்கவசம் அணிந்தாலும், மதிய உணவு சாப்பிடும்போது அல்லது புகைப்பிடிக்கும் அதை அகற்றுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரிய குழுக்களாக கூடி சாப்பிட்டு ஒரே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ளும்போது அல்லது ஒரே கண்ணாடி குவளையில் தண்ணீர் குடிக்கும்போது இது ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது,
“இது போன்ற நிகழ்வுகளில் வைரஸ் பரவியிருப்பதை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்,” என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பண்டிகை காலங்களில் ஒன்று கூடலை் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது மற்றும் ஒன்றுகூடும் போதும் பொதுமக்கள் இதை மனதில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் தங்களின் குடியிருப்பு நகரங்களுக்கு வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் பயணித்ததன் விளைவாக சில பகுதிகளில் துணைக் கொத்தணிகள் உருவாகிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






