நாட்டில் எந்த பிரதேசத்திலும் கொரோனா வைரஸ் இருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்டாயம் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய செயற்படுமாறும் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இதுவரை 36 ஆயிரத்து 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 27 ஆயிரத்து 552 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 8 ஆயிரத்து 332 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.






