இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இம்மாத (ஜனவரி) இறுதியில் விமான நிலையங்கள் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்று மிக விரைவில் கட்டுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புக்கள் கூறியுள்ள நிலையில் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இன்றைய தினம் இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் சேவையிலீடுபடுகின்ற பேருந்துகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
மேலும் முடங்கிப் போயுள்ள ரயில் சேவைகளை மீள இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே முடங்கிப் போயுள்ள நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக விமான நிலையம் திறக்கப்படவுள்ளதென்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை உக்ரைனில் இருந்து 3 ஆம் கட்ட சுற்றுலா பயணிகள் குழு ஒன்றும் இன்று வரவுள்ளது.
எவ்வாறாயினும் முதற்கட்டமாக வந்த உக்ரைன் சுற்றுலாதாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






