அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கெதிரான ரி-20 தொடரில் ஓய்வளிக்கப்பட்ட ஜோப்ரா ஆர்செர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.
அத்துடன், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், டெஸ்ட் அணியின் தலைவர் ஜோ ரூட் சேர்க்கப்படவில்லை. மேலும், இரு அணிகளிலும் டேவிட் வில்லே இடம்பெறவில்லை.
இதுதவிர மார்க்வுட் மற்றும் சேம் கர்ரன் ஆகியோரும் அணியில் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளனர். கிறிஸ் வோக்ஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். முன்னணி வீரரின் வருகையால், சகீப் மொஹமத் மீண்டும் சொந்த கழகத்துக்கு திரும்புகிறார்.
ரி-20 அணியில் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் சகீப் மொஹமத் ஆகியோர் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். ஜோ டென்லி மற்றும் சகீப் மொஹமத் ஆகியோர் ஒருநாள் அணியில் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்,
ஓய்ன் மோர்கன் தலைமையிலான ரி-20 அணியில், மொயின் அலி, ஜோப்ரா ஆர்செர், ஜொனாதன் பேயர்ஸ்டொவ், டொம் பென்டோன், சேம் பிளிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டொம் கர்ரன், ஜோ டென்லி, கிறிஸ் ஜோர்தான், டாவிட் மாலன், அடில் ராஷித், மார்க்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஓய்ன் மோர்கன் தலைமையிலான ஒருநாள் அணியில், மொயின் அலி, ஜோப்ரா ஆர்செர், ஜொனாதன் பேயர்ஸ்டொவ், டொம் பென்டோன், சேம் பிளிங்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டொம் கர்ரன், அடில் ராஷித், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி, இங்கிலாந்து வருகிறது.
இரு அணிகளுக்கிடையில் முதலாவதாக இடம்பெறும் ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 4ஆம் திகதி சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.






