இங்கிலாந்தில் இலங்கை வீரர்கள் செய்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிந்துள்ளனர்.
SLC has decided to bring back cricketers Kusal Mendis and Niroshan Dickwella for breaching the bio-bubble.
Video Credit – Nazzer Nisthar #ENGvSL pic.twitter.com/kfGrLC9MQv
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) June 28, 2021
தற்போது கொரோனா பரவல் காரணமாக பயோ பபுள் விதி கடுமையாக அமலில் உள்ளது.
ஆனால் இந்த விதிகளை மீறியதன் காரணமாகச் சம்மந்தப்பட்ட வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எல்.சி தலைவர் Shammi Silva தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.
அதோடு அடுத்த விமானத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவோம், விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் அவர்கள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என Shammi Silva கூறினார்.
இதற்கிடையே ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, அட்டப்பட்டு, சங்கக்காரா, ஜெயவர்த்தனே, சமிந்தா வாஸ், முரளிதரன் என்று மாபெரும் லெஜெண்ட்களை கொண்டு, உலக அணிகளை மிரட்டி வந்த இலங்கையின் நிலைமை இன்று எவ்வளவு மோசமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மோசமாகச் சென்றுவிட்டது என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.






