இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுப்பதற்க்காக 10 கோடி இந்திய ரூபாவை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபை செலவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 20 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குக்கு கொரோனா பரிசோதனை ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பரிசோதனைக்கு 200 திர்ஹாம் கட்டணம் செலுத்தப்படுகின்ற நிலையில் மொத்தமாக 10 கோடி இந்திய ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






