இங்கிலாந்தின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான இயன் பெல் இந்த பருவகால விளையாட்டு போட்டிகளின் பின்னர் தொழில்சார் சகல போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
அவர் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக விளையாடிதன் பின்னர் தொடர்ச்சியாக கழக கிரிக்கட் போட்டிகளில் விளையாடி வந்தார்.
காயம் காரணமாக 2019 ஆம் ஆண்டு இயன் பெல் முற்றாக கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
கொவிட் 19 பரவல் காரணமாக இந்த ஆண்டு இடம்பெற்ற போட்டிகளிலும் பெரிதாக விளையாடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 22 வருட காலமாக இங்கிலாந்து மற்றும் கழக போட்டிகளில் விளையாடுவதில் தாம் மிகந்த விருப்பத்தை கொண்டிருந்ததாக ஓய்வு குறித்து அறிவித்த போது இயன் பெல் குறிப்பிட்டுள்ளார்.






