பிரோவோவை விட நான் மோசமாக பந்துவீச மாட்டேன் என சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி கிண்டலாக தெரிவித்து இருப்பது ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6ல் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், தோனி, பிராவோ, கெய்க்வாட் அகியோர் கலந்து கொண்ட பேட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அப்போது நிகழ்ச்சி தொகுபாளர் புகைப்படம் ஒன்றை தோனியிடம் காட்டவே csk அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளரான பிராவோவை தோனி பயங்கரமாக கலாய்த்து தள்ளினார்.
பிராவோ எப்போதும் பந்துவீசும் போது வித்தியாசமாக முயற்சி செய்வதாக நினைத்து கொண்டு ஒட்டங்களை வாரி வழங்குவார், வித்தியாசமான முயற்சிகள் எல்லாம் வேண்டாம் என்று கூறியவுடன் ஒரே ஒவரில் 4 ஓயிட் பந்துகள் வீசுவார்.
பாதி நேரங்களில் பிராவோவிற்கு மூளை வேலையே செய்யாது, சில கட்டத்தில் கடுப்பாகி நீ விக்கெட் கிப்பிங் பார்த்து கொள், நான் உனக்காக பந்துவீசுகிறேன் என்று சொல்லிவிட கூட தோன்றும், ஏனெனில் பிராவோவை விட மோசமாக நான் பந்துவீச மாட்டேன் என்று சொல்லி தோனி பிராவோவை பயங்கரமாக கிண்டல் செய்து சிரித்தார்.
இதனை கேட்டு பிராவோவும் சிரித்தது, இருவரின் நட்பையும் பறைசாற்றுவதாக இருகிறது என ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றன.






