கொழும்பில் அமைதியாக நடந்த போராட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது கோழைத்தனம் என்றும், காட்டுமிராண்டித்தனம் என்றும் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரரான வனிந்து ஹசரங்கா, கொழும்பில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
‘கோழைத்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம்! இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்று அப்பாவித்தனமான, அமைதியான முறையில் இலங்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சுருக்கமாக கூறும் வார்த்தைகள்.
நம் நாட்டில் அத்தகைய தலைமை இருப்பதை நினைத்தும் நான் ஏமாற்றமடைகிறேன். இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைந்து நிற்கும் அனைவருடனும் என் இதயம் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.
அமைதிப் போராட்டத்தில் தாக்குதல்.. காட்டுமிராண்டித்தனம்! கொந்தளித்த வனிந்து ஹசரங்கா






