இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ராவுக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த பிரவின் துபே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அமித் மிஸ்ராவுக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இருந்து விலகினார்.
அதனால் அவருக்கு பதிலாக 27 வயதான சுழற்பந்து வீச்சாளர் பிரவின் துபே அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






