இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தனது உடல் எடையை குறைத்தால், விளம்பரங்கள் மூலம் அவரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என ரிஷப் பண்ட் மீது விமர்சனம் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் அதிரடி சதம் விளாசி, தன்னால் எல்லா விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட முடியும் என அவர் நிரூபித்தார்.
அவரது ஆட்டத்தினை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயப் அக்தரும் அவரை பாராட்டியுள்ளார்.
Rishabh Pant
PC: AFP
அத்துடன் பண்ட் ஒரு விடயத்தை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பண்ட் குறித்து அக்தர் கூறுகையில், ‘பண்ட் கொஞ்சம் அதிக எடை கொண்டவர். அவர் அதைக் கவனித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்.
Shoaib Akhtar
PC: Twitter
ஏனென்றால் இந்தியாவின் சந்தை பெரியது என்பதால் ஒரு நபர் எப்போது நட்சத்திரமாகிறார்களோ, அவர் மீது நிறைய முதலீடு செய்யப்படுகிறது. பண்ட் நல்ல தோற்றமுடையவர். எனவே அவர் ஒரு மொடலாக உருவாகி கோடிகளில் சம்பாதிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.
Rishabh Pant






