இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் வீரர் விராட் கோலி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சக வீரர்கள், இதர பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதில், ‘நேர்மையான கடின உழைப்பாளி, நல்ல மதிப்புகள் மற்றும் இரக்கம் நிறைந்த ஒரு மனிதர். அவரை உண்மையான நண்பன் என்று என்னால் அழைக்க முடியும். நாங்கள் விட்டுவிட்ட நட்புக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
Sunil Chhetri
transfermarkt.co
எப்போதும் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். இன்னும் ஒரு ஆண்டு நீங்கள் இளமையாக இருப்பதால், எனது நல்வாழ்த்துக்களையும் அனைத்து நேர்மறைகளையும், எண்ணங்களையும் உங்கள் வழியில் அனுப்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுனில் சேத்ரி’ என தெரிவித்துள்ளார்.
Virat Kohli
PC: IANS Photo






