குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்
ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
டெல்லி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி 99 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் குவிண்டன் டி காக் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ஜென்னேமன் மாலனை 15 ஓட்டங்களிலும், ஹென்றிக்ஸை 3 ஓட்டங்களிலும் சிராஜ் வெளியேற்றினார். அதன் பின்னரும் தென் ஆப்பிரிக்க அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது.






