டி20 உலகக் கிண்ணப் போட்டியின் இறுதித் தருணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்து வீரர்களும் முழுமையான திறமையுடன் இருப்பார்கள் என தான் நம்புவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன (Mahela Jayawardena) தெரிவிக்கின்றார்.
அவுஸ்திரேலியாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மஹேல ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டிகளை புரிந்துக்கொள்ளும் அளவிற்கான புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.






