லங்கா பிரீமியர் லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்கும்போது இலங்கை கிரிக்கெட் வீரர் தனது நான்கு பற்களை இழந்தார்.
விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது மிகவும் இயல்பான விடயம். வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத விளையாட்டான கிரிக்கெட்டில் கூட காயங்கள் என்பது அரிதல்ல.
ஆனால், டிசம்பர் 7-ஆம் திகதி, புதன்கிழமை லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது ஒரு அரிய காயம் ஏற்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக் சீசனில், கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலே கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற 4-வது போட்டியின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் சமிக கருணாரத்ன (Chamika Karunaratne) கேட்ச் பிடிக்கும் முயற்சியில் தனது நான்கு பற்களை இழந்தார். கருண்ரத்னே கேட்ச்சை வெற்றிகரமாக பிடித்தார், ஆனால் பந்து அவரது முகத்தில் விழுந்து நான்கு பற்களை உடைத்த பின்னரே பந்தை அவர் கையில் பிடித்தார்.
ஆஃப் சைடில் வட்டத்திற்குள் பீல்டிங் செய்துகொண்டிருந்த சமிகா கேட்ச் பிடிக்க ஓடினார். ஆனால், அவரால் பந்தை சரியாக மதிப்பிட முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
Chamika Karunaratne lost 3-4 teeth while taking this catch. pic.twitter.com/cvB44921yZ
— Johns. (@CricCrazyJohns) December 8, 2022






