LPL தொடரின் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரான கபீர் அலிக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக க்ரிக்இன்ப்போ விளையாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது . இதனால் அவர் இந்த தொடரில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிற போதிலும் இன்னும் எது தொடர்பான உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏலவே டேவ் வொட்மோர் இந்த அணியின் பயிற்றுவிப்பாளர் அறிவிக்கப்பட்டு ,பின்னர் கபீர் அலிக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. LPL போட்டிகள் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது .






