சரியாக அடுத்த இரு வருடங்களில், அதாவது 2022 நவம்பர் 21 அன்று கட்டாரில் கால்பந்து உலகக் கிண்ண போட்டி தொடங்கவுள்ளது.
2022 கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெறும் என ஃபிஃபா அமைப்பு 2010 டிசம்பரில் அறிவித்தது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன . லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டோஹாவைச் சுற்றியுள்ள 8 மைதானங்கள் இப்போட்டிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
இதுவரை கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளை நடத்திய நாடுகளிலேயே மிகச்சிறியது கட்டார் தான் . இதற்கு முன்பு கட்டாரை விட 3 மடங்கு பெரிய நாடான சுவிஸ்லார்ந்து 1954 இல் உலகக் கிண்ணத்தை நடத்தியது. ஆனால் அப்போது 16 அணிகளே பங்கேற்றன. இப்போது 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. 28 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கட்டார், கால்பந்து உலகக் கிண்ணத்ததை நடத்தும் முதல் அரபு நாடாகும்






