ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவின் உடற்தகுதி தேர்வு முடிவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால், உடல்தகுததியை நிரூபிக்க நவம்பர் 19ம் தேதி ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.
இதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோகித் சா்மா சோ்க்கப்படவில்லை.
இந்நிலையில், இன்று ரோகித் சர்மாவுக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சிப்பெற்றதாக தேசிய கிரிக்கெட் அகடாமி (என்சிஏ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கிரக்கெட் விளையாட ரோகித் சர்மா உடற்தகுதி பெற்றுவிட்டார், மேலதிக முடிவுகளை பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு தான் எடுக்க வேண்டும் என என்சிஏ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா, டெஸ்ட் தொடரில் விளையாடுவது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ அனுமதி வழங்கினால் ரோகித் சர்மா அடுத்து இரண்டு நாட்களுக்குள் அவுஸ்திரேலியா செல்வார்.
அவுஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதால், ரோகித் சர்மா கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2-1 என ஒருநாள் தொடரை இழந்தாலும், 2-1 என டி-20 தொடரைக் கைப்பற்றியது.
அடுத்ததாக இரு அணிகளுக்கு இடையே 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் வரும் 17-ஆம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.






