இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) சிறப்பான பந்துவீச்சுப் பெறுதியை கோல் கிளாடியேட்டர்ஸின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் கொண்டிருந்தார்.
கொழும்பு கிங்ஸுக்கெதிரான போட்டியொன்றில் நான்கு ஓவர்களை வீசிய ஆமிர், 26 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்ந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
ஆமிருக்கு அடுத்ததாக, காலிக்கெதிரான போட்டியில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸின் வேகப்பந்துவீச்சாளர் டுவன்னே ஒலிவியர், தனது நான்கு ஓவர்களில் 44 ஓட்டங்களை வழங்கியபோதும் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
இத்தொடரில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஆமிர், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் ஐந்தாமிடத்தில் காணப்படுகிறார்.






