குழந்தைகளை கண்காணிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் புதிய Tool ஒன்று அறிமுகமாகியுள்ளது, இதன் தாய் நிறுவனமான Meta Plotforms இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பதின்ம வயது சிறுமிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அங்கு வேலை செய்து நபர் ஒருவே ஆவணங்களை கசியவிட அந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
இதனால் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழ, இன்ஸ்டாகிராம் கிட்ஸ் உருவாக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனத் தலைவர் ஆடம் மொரேஸி தெரிவித்தார்.
இந்நிலையில் வயதை மறைத்து இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் சிறார்களை கண்டுபிடிக்க புதிய வகையான Tool ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சிறார்களின் பெற்றோர்கள், எவ்வளவு நேரம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளனர் என்பது உட்பட பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் எவ்வளவு நேரம் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நேரத்தையும் நிர்ணயிக்கலாம்.
இதற்கிடையே மே மாதம் Quest headset பயன்பாட்டுக்கும் பிரத்யேக Tool வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.






