ரகசிய கெமரா மூலம் பெண்களை படம்பிடிக்கும் சம்பவங்கள் உலகளவில் அதிகரித்துள்ளன. அந்த பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டும் பகீர் சம்பவங்களியும் அவ்வப்போது நடப்பதை கேள்விபடுகிறோம்.
முக்கியமாக ஹொட்டல் அறைகள், துணிக்கடைகளில் ஆடைகள் மாற்றும் அறை, பொதுகழிப்பறை, குளியலைறை ஷவர், அறையின் கூரை பகுதி, கதவு துளைகள் போன்ற இடங்களில் ரகசிய கெமரா வைக்கப்படுகிறது.
இது போன்ற இடங்களில் ரகசிய கெமரா பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?
இருட்டாக்கவும்
ரகசிய கெமராவில் பச்சை அல்லது சிவப்பு LED விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் தொடர்ந்து ஒளிரும். அவற்றைக் கண்காணிக்க, சந்தேகம் இருக்கும் அறையை முற்றிலும் இருட்டாக மாற்ற வேண்டும். இப்போது அங்கு ரகசிய கெமரா இருந்தால் அது இருட்டில் ஒளிரும்.
குளியலறை மற்றும் உடை மாற்றும் அறையில் ரகசிய கெமராவை கண்டுபிடிப்பது எப்படி? 3 வழிகள் | Hidden Camera Tamil Tech
செல்போன்
செல்போனில் இருந்து ரேடியோ அலைவரிசைகள் தொடர்ந்து வெளிவருகின்றன. கெமரா பொருத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில், ஏதேனும் ஒரு எண்ணை டயல் செய்யவும். அங்கு கெமரா இருந்தால், ரேடியோ அலைவரிசை காரணமாக அழைப்பில் சிக்கல் ஏற்படும்.
செயலிகள்
ரகசிய கெமராவை கண்டறிய ப்ளே ஸ்டோரில் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலிகள் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்.
குளியலறை மற்றும் உடை மாற்றும் அறையில் ரகசிய கெமராவை கண்டுபிடிப்பது எப்படி? 3 வழிகள் | Hidden Camera Tamil Tech






