இன்றைய கால கட்டத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்சினை துவங்குகிறது.
மனஅழுத்தம், மனசோர்வு, செரிமான பிரச்சனை போன்றவைகளும் தூக்க சுழற்சி முறைகளை சிதைக்கும் காரணிகளாக இருக்கிறது.
உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே ஒருவருக்கு முறையான தூக்கம் என்பது அவசியமானது ஆகும். அந்தவகையில் தூக்கத்தை இயற்கை முறையில் தூண்ட சில உணவுகள் உதவி புரிகின்றது. அது என்னென்ன என்பதை பார்ப்போம்.
- தூங்குவதற்கு முன்னதாக அல்லது பகல் வேலையில் பாதம் சாப்பாட்டு வந்தால் தூக்கம் மேம்படும். தூக்கத்தை ஓங்குபடுத்தும் ஹார்மோன் மெலடோன் மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமம் மக்னீசியம் அதிகளவு பாதாம் இருக்கிறது.
- தூக்கமின்மையால் அதிகளவு ஆளாகும் நபர்கள் வாழைப்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் டிரிப்டோபைன் அமினோ அமிலம் அதிகரிக்கிறது. மூளைக்கு சமிக்கை ஓடுது தூக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருளை உருவாக்கும்.
- சாமந்தி தேநீரில் உள்ள அபிஜெனின் என்கிற ஆன்டிஆக்சிடெண்டு மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளின் செயல்பாடுகளை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்துகிறது.
- பாலுடன் மஞ்சள், குங்கும பூ சேர்ந்து குடித்து வந்தால் நல்ல தூக்கமானது ஏற்படும். இதில் டிரிப்டோபைன் அமினோ அமிலம் அதிகளவு இருக்கிறது. நடைப்பயிற்சி செய்யும் நபர்கள் பால் குடித்து வர நல்ல தூக்கம் ஏற்படும்.
- இரவு வேளைகளில் குறைவாக சாப்பிடுவது மிகவும் நல்லது. ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால், நமது ஆரோக்கியம் மேம்படும், ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும். ஓட்ஸில் மனஅழுத்தத்தை குறைக்க கூடிய வைட்டமின் பி 6 சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.






