இந்திய அணியின் இருக்கும் ரிஷப்பாண்ட்டை, கிரிக்கெட் வல்லுனர் ஆகாஷ் சோப்ரா விளாசியுள்ளார்.
கோஹ்லி தலைமையிலான் இந்திய அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துவிட்டது. ஒருநாள் தொடரை அவுஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் வென்றுள்ளது.
இதற்கிடையில் இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு, விக்கெட் கீப்பரான ரிஷப் பாண்ட் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால், அவருக்கு எந்த ஒரு போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இது குறித்து கிரிக்கெட் வல்லுனர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக்கு இடையே நடந்த பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட்டை ஒரு பீல்டராக கூட தேர்வு செய்யவில்லை. இந்த நிலை ரிஷப் பண்டிற்கு மாபெரும் நெருக்கடியை உண்டாகும் என்றார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் கடைசி இடத்தில் இருக்கிறார். இது அவரது எதிர்காலத்திற்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விக்கெட் கீப்பராக களம் இறக்கவில்லை என்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்கி இருக்கலாம்.
தற்போது ரிஷப் பண்டின் நிலையை பார்க்கும்போது அவுஸ்திரேலியா நாட்டை சுற்றி பார்க்க வந்த டூரிஸ்ட் போல் உள்ளார்.
இந்த தொடர் முழுவதும் பண்ட் இடம்பெற்றிருந்தாலும் அவர் அணியில் விளையாடப்போவதில்லை. இப்படி ஒரு நிலையில் இது அவரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. அவருக்கு பின்னர் இன்னும் பல வீரர்கள் அவரது இடத்தை பிடிக்க காத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.






