உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது இந்தியாவிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் 79 ஆயிரத்து 457 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 இலட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 960 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கையாக 64 ஆயிரத்து 617 ஆக அதிகரித்து காணப்படுகின்றன.
தொற்றுக்கு உள்ளான 7 இலட்சத்து 81 ஆயிரத்து 624 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 8 ஆயிரத்து 944 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.






