இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தற்பொழுது அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 68 ஆயிரத்து 770 பேர் புதிய தொற்றாளர்களாக பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 818 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36 இலட்சத்து 87 ஆயிரத்து 939 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது .
மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 இலட்சத்து 37 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், 7 இலட்சத்து 85 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.






