லடாக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கிலில் இருந்து வடமேற்கே 435 கிலோ மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில நிமிடங்கள் உணரப்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதுடன், இதனால் பீதியடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை நேற்று மும்பையில் இதேபோன்று நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தமை என்பதும் குறிப்பிடத்தக்கது.






