பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, மூன்று இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது!
அண்மைய புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் வைரஸ் தொற்றினால் மூன்று இலட்சத்து 50ஆயிரத்து 100பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை 41ஆயிரத்து 554பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 948பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 69பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






